மன்னம்பாடி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும்
Friday, 9 December 2016
Thursday, 27 October 2016
ராஜ்ய புரஸ்கார் விருது பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆளுநர் விருது (ராஜ்ய புரஸ்கார்) பெற்ற சாரணர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சாரண ஆசிரியர் புகழேந்தி வரவேற்புரையாற்றினார். ஆசிரியர்கள் சசிகுமார், பிரியா ஆகியோர் விருது பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.
தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் அவர்கள் விருது பெற்ற மாணவர்களையும் அதற்குக் காரணமாக இருந்த சாரண ஆசிரியரையும் பாராட்டினார்.
ராஜ்யபுரஸ்கார் விருது பெற்ற மாணவர்கள் அரவிந்தசாமி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோர் தங்களின் அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்துகொண்டனர். நிறைவாக மாணவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
இப்பள்ளி அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் இப்பள்ளியிலிருந்து முதன்முதலாக இந்த விருதினை மாணவர்கள் பெறுவது குறிப்பிடத்தக்கது.
மன்னம்பாடி மிகவும் பின்தங்கிய சிற்றூர். சாரணர் சீருடை வாங்குவதற்குக்கூட வசதியற்ற பொருளாதார சூழலில் உள்ள மாண்வர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனக்கள் மூலம் சீருடை வழங்கி பயிற்சி அளித்த சாரண ஆசிரியரை அனைவரும் பாராட்டினர்.
Sunday, 25 September 2016
மாணவர் செயல்திட்டம்
Tuesday, 23 August 2016
சமபக்கமுக்கோணத்தின் சுழற்சிக்கோணம் செய்து கற்றல்
சமபக்க முக்கோணத்தின் சுழற்சிக்கோணம் 120 பாகை என்பதை செயல்வழியாகக் கற்கும் 7 ஆம் வகுப்பு மாணவியர்.
காணொளி காண இங்கே சொடுக்குக
மாணவர் செயல்பாடு
வளரறி மதிப்பீட்டு செயல்பாடுகள்.
மாணவர்களின் வளரறி மதிப்பீட்டு செயல்பாடுகள் சுட்டி விகடன் இதழில் வெளியானவை.
Wednesday, 3 August 2016
மெய் நிகர் வகுப்பறை தொடக்கம்
அன்பாசிரியர் தொடரில் இப்பள்ளி ஆசிரியர் புகழேந்தி பற்றி படித்த பெயர் குறிப்பிட விரும்பாத கத்தார் நாட்டில் பணியாற்றும் அரசு பள்ளியில் படித்த தமிழர் ஒருவர் புதிதாக புரஜக்டர் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார் அந்த மகிழ்ச்சியை எளிமையாகக் கொண்டாட விரும்பினோம். விருத்தாசலம் கோட்டாட்சியர் திரு செந்தில்குமார் அவர்கள் பள்ளிக்கு வந்து புரஜக்டரை இயக்கி எம் மாணவர்களையும் எங்களையும் மகிழ்வித்தார்.புரவலருக்கு நன்றி.
Thursday, 3 March 2016
Subscribe to:
Posts (Atom)