Tuesday, 4 November 2014

மன்னம்பாடி உயர்நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற விழா

          மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற விழா
இன்று (31.10.2014) நடைபெற்றது.

     விழாவுக்கு பொறுப்புத் தலைமை ஆசிரியர் முனைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் மலையரசன் வரவேற்றார். மாணவர்கள் அமர்நாத், சூரியமூர்த்தி ஆகியோர் தமிழிசைப் பாடல்கள் பாடினர். சிறப்பு விர்ந்தினராக முனைவர் கவிஞர் பட்டி சு.செங்குட்டுவன் கலந்துகொண்டு தமிழர்களின் தொன்மை நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை சங்க இலக்கியம் எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது மாணவர்கள் எவ்வாறு அவற்றைக் கற்பது என்பது குறித்து பல்வேறு இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர் தனேந்திரன் நன்றி கூறினார்.

ஆசிரியர்கள் கோபிநாத்,கோவிந்தராஜ்,வைத்தியநாதன், சுந்தரி, பிரியா, கார்த்திகேயன் ஆகியோர் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
     
        சிறப்பு விருந்தினர் கவிஞர் முனைவர் பட்டி சு,செங்குட்டுவன்              அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்படுகிறது.
              கவிஞருக்கு நினைவுப்பரிசாக நூல் வழங்கப்படுகிறது

                         கவிஞரின் சிறப்புரை


      

Sunday, 10 August 2014

இலக்கியமன்ற தொடக்கவிழா.மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற தொடக்கவிழா 7-8-14 வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் இரத்தின புகழேந்தி முன்னிலை வகித்தார். இலக்கியமன்ற செயலாளர் தமிழாசிரியர் மலையரசன் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு எழுத்தாளர்   சிறப்புரையாற்றிய இமையம் , “தமிழ்  இலக்கியத்தின் சிறப்புகளையும் தமிழ்ப் புலவர்களின் பெருமைகளையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். மேலும் மாணவர்கள் அழியாச் செல்வமாகிய அறிவுச்செல்வத்தை சேர்க்கவேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் வாழக்கூடிய படைப்புகளைத் தந்த புலவர்களை நாம் இன்றும் மறக்காமல் இருக்கிறோம் என்றால் அவர்களின் படைப்புகளின் வலிமையை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்”. என்று மாணவர்களின் சிந்தனையைத்தூண்டினார். ஆசிரியர்கள் கோபினாத், கோவிந்தராஜ், இளநிலை உதவியாளர் சித்ரா ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். 
ஆசிரியர் கோபினாத் நன்றி கூறினார்.
 மலையரசன் வரவேற்புரை
 தலைமை ஆசிரியர் தலைமை உரை
 சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் இமையத்திற்கு பொன்னாடை அணிவித்தல்
 எழுத்தாளருக்கு நினைவுப் பரிசு
 எழுத்தாளர் இமையம் அவர்களை அறிமுகம் செய்தல்
 சிறப்புரை : எழுத்தாளர் இமையம்


நன்றியுரை கோபினாத்.

Monday, 7 April 2014

மூன்றாம் பருவ செயல் திட்டங்கள்நியூட்டன் வட்டு
வெள்ளை ஒளி என்பது ஏழு நிறங்களால் ஆனது. என்று நியூட்டன் கண்டறிந்த உண்மையை இந்த வட்டின் மூலம் அறியலாம்.
தேவையான பொருள்கள்: அட்டை, தாள், ஸ்கெச் பேனாக்கள்.
செய்முறை: தேவையான அளவில் அட்டையை வட்ட வடிவில் வெட்டி அதன் மீது வெள்ளைத்தாளை ஒட்டி அந்த வட்டத்தை ஏழு சம பாகமாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் ஒரு நிறமாக வான வில்லின் ஏழு நிறங்களை பூசி, வட்ட மையத்தில் சிறு துளையிட்டு அதில் பென்சில் முனையைப்பொருத்தி வட்டைச் சுழற்றிவிட்டால் வெண்மை நிறத்தைப்பார்க்கலாம்.
7 ஆம் வகுப்பு , அறிவியல், வெப்பவியலும் ஒளி இயலும் பாடத்திற்கான செயல்திட்டம்.
செய்தவர்கள்: வ.தேவேந்திரன், வெ.மணிகண்டன், ஜெ.சுபாஷ்சந்திரபோஸ், சி.வெற்றிவேல்  7ஆம் வகுப்பு

 காற்றாலை மாதிரி
தேவையான பொருள்கள்: அட்டைபெட்டி, ஒரு அடி நீள குழாய், பிளாஸ்டிக் விசிரி,சைக்கிள் சக்கரத்தின் கம்பி ஒயர், காயில்,பற்சக்கரங்கள் , பல்ப்
செய்முறை: அட்டைப்பெட்டியின் மையத்தில் துளை அமைத்து அதில் குழாயை பொருத்திப் பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.பிளாச்டிக் விசிரியின் பின்பகுதியில் பற்சக்கரத்தைப் பொருத்தி அதனுடன் இன்னொரு பற்சக்கரம் பொருத்தி அதில் கம்பியைப்பொருத்துக. விசிறி சுற்றினால் கம்பி சுற்றுமாறு அமைக்க வேண்டும்.கம்பியின் இன்னொரு முனையில் ஒரு பற்சக்கரத்தை இணைத்து அதன் நடுவில் டைனமோ காயிலைப் பொருத்துக.கம்பியை குழாயினுள் விட்டு வெளியில் தெரியாமல் மரைக்கவும். விசிரி சுற்றினால் காயிலில் இருந்து மின்சாரம் உற்பத்தியாகி பல்ப் எரியும்.8
8ஆம் வகுப்பு, அறிவியல், நிலக்கரியும் பெட்ரோலியமும் பாடத்திற்கான செயல் திட்டம்.
செய்தவர்: வே.ராஜ்கிரண் 8 ஆம் வகுப்பு

விமானம்
சுட்டி விகடன் வழங்கும் கிரியேஷன் பகுதியில் இடம்பெற்ற விமானம் மாதிரியைக்கொண்டு செய்யப்பட்டது.
செய்தவர் : பா.விக்னேஷ் 8 ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி, மன்னம்பாடி
நன்றி : சுட்டிவிகடன்

Tuesday, 4 March 2014

Monday, 27 January 2014

கட்சி முறைகளில் எது சிறந்தது ?
 
  கட்சி முறைகளில் சிறந்தது... 'ஒரு கட்சி முறையா? இரு கட்சி முறையா?  பல கட்சி முறையா?’ ஒரு விவாதம்...

    பங்கேற்பு: மன்னம்பாடி, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏழாம் வகுப்பு மாணவர்கள்.

    தேவேந்திரன்: ''கட்சி முறைகளில் சிறந்தது ஒரு கட்சி முறைதான். ரஷ்யாவில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. அப்போதுதான், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்''.

    வீரச்செல்வி: ''உலக நாடுகளில் வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவில், இரு கட்சி முறைதான் உள்ளது. அதனால், இரு கட்சி முறைதான் நல்லது.''

    வேம்பன்: ''பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் மட்டுமின்றி, நம் இந்தியாவிலும் பல கட்சி முறைதான் உள்ளது. எனவே, பெரும்பான்மை நாடுகள் பின்பற்றும் பல கட்சி முறையே சிறந்தது.''

    லைலா: ''பல கட்சி முறை பின்பற்றப்படும் நம் நாட்டில்தான் ஊழல்கள் அதிகம் நடக்கின்றன. எனவே, சமத்துவ சமுதாயம் மலர, ஒரு கட்சி முறைதான் சிறந்தது.''
சிவக்குமார்: ''இரு கட்சி முறையில்... ஒரு கட்சி தவறு செய்தால், மற்றொரு கட்சிக்கு நாட்டை ஆளும் வாய்ப்பு கொடுக்கலாம். எனவே, இரு கட்சி முறையே சிறந்தது.''

வீரவெங்கட்: ''பல கட்சி முறையில் ஊழல் நடந்தால், அடுத்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். அப்படி ஒரு வாய்ப்பு பல கட்சி முறைக்கு மட்டுமே உள்ளது.''

மணிகண்டன்: ''ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு நீங்க வேண்டுமானால், சோஷலிச ஆட்சி வரவேண்டும். அதற்கு ஏற்றது, ஒரு கட்சி முறையே.''

ரஞ்சிதா: ''இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஒன்றும் தெரியாமலா இரு கட்சி ஆட்சி முறையைப் பின்பற்றுகின்றனர்? வளர்ந்த நாடுகளைப் பார்த்து நாமும் கற்றுக்கொண்டால்தான் முன்னேற முடியும். அதற்கு அடிப்படை, நம் தேர்தல் முறையை மாற்றுவதுதான். எனவே, இரு கட்சி முறைதான் சிறந்தது.''

கௌசல்யா: ''நம் நாட்டைப் போன்ற வளரும் நாடுகளுக்கு, பல கட்சி முறையே ஏற்றது.  மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே இந்த உரிமைதான். எனவே, எல்லோரும் இந்நாட்டு மன்னராக... பல கட்சி முறைதான் ஏற்றது.''

(இது மாதிரியான விவாதத்தை மாணவர்களே தயாரித்து வருமாறு செய்து மதிப்பிடலாம்)
7ஆம் வகுப்பு சமூக அறிவியல் ,அரசியல் கட்சிகள் பாடத்திற்கான செயல்பாடு.

- இரத்தின புகழேந்தி,
அரசு உயர்நிலைப் பள்ளி,
மன்னம்பாடி

நன்றி : கல்வி விகடன்

நிகழ்தகவு மாணவர் செயல்பாடு