Wednesday, 18 December 2013

மன்னம்பாடி பள்ளி மாணவர்களின் செயல்திட்டங்கள் 2013 இரண்டாம் பருவம்

Wednesday, 11 December 2013

விளையாட்டாக அறிவோம் சராசரி

விளையாட்டாக சராசரி அறிவது எப்படி என்பதை சுட்டிவிகடனில் வெளியான இந்த செயல்பாடு விளக்குகிறது.

Thursday, 12 September 2013

பாரதியார் நினைவு நாள்

பாரதியார் நினைவு நாள் மன்னம்பாடி பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.
பாரதியார் படத்திற்கு தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பாரதியார் பாடல்களை மாணவர்கள் பாடினர்.


Tuesday, 16 July 2013

காமராசர் பிறந்தநாள் விழா


15.07.2013 அன்று காலை  காமராசர் பிறந்தநாள் விழா மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமை ஏற்றார். மாணவர்களுக்கு காமராசரின் வாழ்க்கை வரலாறு ஆசிரியர்களால் எடுத்துக்கூறப்பட்டதுசென்ற ஆண்டு மூன்றாம் பருவத்தில் சிறந்த ஆய்வுத்திட்டத்தினை அளித்ததற்காக சுட்டி விகடன் வழங்கிய பாராட்டுச் சான்றிதழை ஏழாம் வகுப்பில் பயிலும் வீரவெங்கட், மணிகண்டன், தேவேந்திரன்,வேம்பன் ஆகிய மாணவர்களுக்கு தலைமை


ஆசிரியர் வழங்கினார். அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 500 ரூபாய் மதிப்புள்ள நூல்களை பள்ளி நூலகத்திற்கு  அவர்களின் அன்பளிப்பாக தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள்.

Sunday, 2 June 2013

பள்ளியின் முதல் மாணவர்



இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக 2013 இல் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் கிருஷ்ணன்  முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் . அவருக்கு பள்ளியின் சார்பில் வாழ்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கிருஷ்ணன் பெற்ற மதிப்பெண்கள்

தமிழ்          : 77

ஆங்கிலம்          : 44

கணக்கு            : 47

அறிவியல்          : 92

சமூக அறிவியல் :  83

கூடுதல்         : 343


குறிப்பு : ஓராண்டாக பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை 2012 டிசம்பரில் மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இன்னும் ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  

Thursday, 21 March 2013

Monday, 4 March 2013

மாணவர் நாடகம்

ஆறாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பில் நடித்துக்காண்பித்தத் துணைப்பாடம் சொல் வாங்கலியோ...சொல்...

Friday, 1 March 2013

பள்ளி சுகாதார மன்றம்



பள்ளி சுகாதார மன்றம் தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

Wednesday, 6 February 2013

மாத்திரை விளயாட்டு

தமிழ் இலக்கணம். மாத்திரை என்ற கருத்தை விளையாட்டு முறையில் கற்பிக்க ஒரு டெயல்பாடு. சுட்டிவிகடனில் வெளிவந்த எம் பள்ளி மாணவர்களின் செயல்பாடு. 

சமன்பாடுகளின் செயல்பாடு

சமன்பாடு என்னும் கருத்தினை மாணவர்களுக்கு செயல்பாட்டின் வழியே கற்பிக்க ஒரு வழி. எம் பள்ளி மாணவர்களின் செயல்பாடு சுட்டிவிகடனில்.

Friday, 18 January 2013

சுட்டிவிகடனின் பரிசு



சுட்டி விகடன் நடத்திய செயல்திட்ட போட்டியில் எம் பள்ளி மாணவியரின் செயல் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான பரிசாக 500 ரூபாய்க்கும் மேலான மதிப்புடைய நூல்களையும் பங்கேற்ற மாணவியருக்கான சான்றிதழ்களையும்  சுட்டிவிகடன் நிர்வாகத்தினர் அனுப்பியிருந்தனர். சான்றிதழ்களை மாண்வர்களுக்கு வழங்கினார் தலைமை ஆசிரியர். நூல்களை பள்ளிநூலகத்திற்கு மாணவிகள் வழங்கினர்.சுட்டிவிகடனுக்கு நன்றிகள்.