Monday, 31 December 2012

10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு கால அட்டவணை - மார்ச்-2013



27/03/2013 - தமிழ் முதல் தாள்

28/03/2013- தமிழ் இரண்டாம் தாள்

01/04/2013- ஆங்கிலம் முதல் தாள்

02/04/2013- ஆங்கிலம் இரண்டாம் தாள்

05/04/2013- கணிதம்

08/04.2013- அறிவியல்

12/04/2013- சமூக அறிவியல்

அறிவியல் செய்முறைத்தேர்வு பிப்ரவரி இறுதியிலோ மார்ச் முதலிலோ நடைபெறும்.

மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

Saturday, 22 December 2012

சுட்டிவிகடனில் தேர்வான செயல்திட்டம்




சுட்டி விகடனில் எம் பள்ளி மாணவிகளின் செயல் திட்டம் தேர்வாகி வெளிவந்துள்ளது.
அதனைப் பாராட்டி விருத்தாசலம் துணை ஆட்சியர் திரு ஆனந்தக்குமார் அவர்கள் சுட்டிவிகடன் இதழ்களை மாணவிகளுக்கு வழங்கினார்.

Tuesday, 18 December 2012

நிலவேம்பு குடிநீர் வழங்கல்

                                            பரப்புரை நிகழ்த்தும் கோட்டாட்சியர்

நிலவேம்பு குடிநீர் வழங்கும் கோட்டாட்சியர்
                                 விழாவில் அமர்ந்திருக்கும் மாணவ மாணவிகள்

இன்று விருத்தாசலம் கோட்டாட்சியர் டெங்கு விழிப்புணர்வு பரப்புரை செய்து நில வேம்பு குடிநீர் வழங்கினார். ஈர நிலம் அறக்கட்டளை நிறுவனர் ஓவியர் தமிழரசன் ஏற்பாடு செய்தார். வட்டாட்சியர்,கிராமநிர்வாக அலுவலர், ஊராட்சிமன்றத்தலைவர், வருவாய் ஆய்வாளர், சித்தமருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sunday, 2 December 2012

மாணவர் செயல்பாடு



எம் பள்ளி மாணவர்களின் செயல்பாடு சுட்டிவிகடனில் இடம்பெற்றுள்ளது.

Friday, 30 November 2012

உலக வாசிப்பு தினம்


உலக வாசிப்பு தினத்தை முன்னிட்டு முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைப்படி இன்று மாணவர்களுக்கு பாடநூல் அல்லாத நூலக நூல்கள் வழங்கப்பட்டு வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தினோம். பல மாணவர்கள் ஆர்வமாக வாசித்து குறிப்புகள் எடுத்தனர்.

Wednesday, 28 November 2012

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்



டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியர் திருமதி ந.சரஸ்வதி தொடங்கி வைக்க ஆசிரியர்கள் புகழேந்தி, அக்பர்,கோவிந்தராஜ்,சுரேஷ் ஆகியோர் மாணவர்களின் ஊர்வலத்தை வழிநடத்தினர். 

Friday, 9 November 2012

வாழ்வியல் திறன் பயிற்சி



செஞ்சுருள்  கழகம். விழிப்புணர்வு .

வாழ்வியல் திறன் பயிற்சி

Thursday, 18 October 2012

உலக கை கழுவும் நாள்

மன்னம்பாடி அரசு உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.