Monday, 18 March 2019

ராஜ்ய புரஸ்கார் விருது பெற்ற சாரணர்கள்






மேதகு தமிழக ஆளுநரால் சிறந்த சாரணர்களுக்கு வழங்கப்படும் ராஜ்ய புரஸ்கார் விருது பெற்ற இப்பள்ளி சாரணர்கள். 

Wednesday, 9 January 2019

ரூபாய் 35,000க்கு விளையாட்டு பொருள்கள் அன்பளிப்பு


மன்னம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, சென்னை வருமான வரித்துறை உதவி ஆணையர் திருமதி பா. மாலதி IRS அவர்கள் ரூபாய் 35,000 மதிப்பில் விளையாட்டு பொருள்கள்  வழங்கியுள்ளார்கள். அன்னார்க்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, 20 January 2018

10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி: க.நாகராஜன், பட்டதாரி ஆசிரியர், திருக்குவளை.
https://drive.google.com/drive/my-drive

Monday, 11 September 2017

பொது மருத்துவ முகாம்

பள்ளியில் என்.எல்.சி நிறுவனம் இப்பள்ளியில் பொது மருத்துவமுகாமை நடத்தியது. முகாம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஈரநிலம் தமிழரசன் மேற்கொண்டார். மருத்துவர் முருகதாஸ் அவர்களின் எம்.டி.பி. மருத்துவமனை அனைத்து விதமான ஒத்துழைப்பையும் நல்கினார்கள். நாங்கள் அனைவரும் சோதனை செய்துகொண்டோம்.  பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பயனுள்ளதாக அமைந்தது. பல்ருக்கு தேவையான மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன். கண் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்க்ப்ப்ட்டன . அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் கலந்துகொண்டு பொது மக்களுக்கு, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிச்சொதனை மேற்கொண்டனர். அனைத்து தன்னார்வலர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தலைமை ஆசிரியர் திரு. க.வீரபாண்டியன் அவர்கள் நன்றி கூறினார்.


Tuesday, 4 July 2017

நூலக செயல்பாடு





நேற்று ஒன்பதாம் வகுப்பு கணக்கு பாடவேளை முடிந்து வெளியேறும்போது அடுத்த பாடவேளை என்ன என்று கேட்ட்தற்கு நூலகம் என்றனர் மாணவர்கள் நூலகம் செல்லலாமா என்றதும் உற்சாகம் தொற்றிக்கொண்டது மாணவர்களிடம். வழக்கமாக நூலகப் பாடவேளையின்போது வகுப்பில் எத்தனை மாணவர்கள் உள்ளனரோ அத்தனை நூல்களை வகுப்புத்தலைவனிடம் கொடுத்து அனைவருக்கும் வழங்கி பாடவேளை முடிந்ததும் கொண்டுவந்து நூலகத்தில் வைப்பது வழக்கம். நூல்களை அவர்களே தேர்ந்தெடுத்துப் படிக்க வாய்ப்பு இருக்காது. இன்று நீங்களே ஒரு நூலைத்தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும். இன்று என்ன நூல் படித்தீர்கள் அதை எழுதியது யார் நூலில் உன்னைக்கவர்ந்த அம்சம் எது என்று ஒரு குறிப்பேட்டில் குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் ஒவ்வொரு மாதக்கடைசியிலும் அந்த குறிப்புகள் அடிப்படையில் யார் நூலகத்தைச் சிறப்பாக பயன்படுத்துகிறீர்கள் என்று கண்டறிந்து பரிசு வழங்கப்படும் என்று கூறியதும் மாணவர்களிடம் மகிழ்ச்சி முழக்கம். இது அவர்களை வாசிக்கத்தூண்டும் என நினைக்கிறேன் ஒரு மாதம் காத்திருங்கள் முடிவுகளை அறிந்துகொள்ள. இந்த நாள் எழுத்தாளர் திரு வே.சபாநாயகம் அவர்கள் மறைந்த நாள் என்பது இன்றுதான் நினைவுபடுத்துகிறது முகநூல். இங்கே அந்த குடும்பத்தினரை நன்றியோடு நினைவுகூர்கிறோம். அவர்கள் இல்லை எனில் எம் பள்ளிக்கு இப்படி ஒரு நூலகம் சாத்தியமில்லை. 

Wednesday, 5 April 2017

பள்ளி ஆண்டுவிழா 2017


இப்பள்ளி ஆண்டுவிழா 1.04.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. படங்கள்:

Friday, 9 December 2016

மறைந்த முதல்வருக்கு அஞ்சலி

மறைந்த முதல்வருக்கு மன்னம்பாடி உயர்நிலைப்பள்ளியில் இன்று நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Thursday, 27 October 2016

ராஜ்ய புரஸ்கார் விருது பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆளுநர் விருது (ராஜ்ய புரஸ்கார்) பெற்ற சாரணர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சாரண ஆசிரியர் புகழேந்தி வரவேற்புரையாற்றினார். ஆசிரியர்கள் சசிகுமார், பிரியா ஆகியோர் விருது பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் அவர்கள் விருது பெற்ற மாணவர்களையும் அதற்குக் காரணமாக இருந்த சாரண ஆசிரியரையும் பாராட்டினார். ராஜ்யபுரஸ்கார் விருது பெற்ற மாணவர்கள் அரவிந்தசாமி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோர் தங்களின் அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்துகொண்டனர். நிறைவாக மாணவர் வெங்கடேசன் நன்றி கூறினார். இப்பள்ளி அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் இப்பள்ளியிலிருந்து முதன்முதலாக இந்த விருதினை மாணவர்கள் பெறுவது குறிப்பிடத்தக்கது. மன்னம்பாடி மிகவும் பின்தங்கிய சிற்றூர். சாரணர் சீருடை வாங்குவதற்குக்கூட வசதியற்ற பொருளாதார சூழலில் உள்ள மாண்வர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனக்கள் மூலம் சீருடை வழங்கி பயிற்சி அளித்த சாரண ஆசிரியரை அனைவரும் பாராட்டினர்.

Sunday, 25 September 2016

மாணவர் செயல்திட்டம்


சுட்டி விகடனில் வெளியான மாணவர் செயல்திட்டங்கள்
நன்றி: சுட்டிவிகடன் பின்னப்பெருக்கல் காணொளிக்கு இங்கே சொடுக்குக

Tuesday, 23 August 2016

சமபக்கமுக்கோணத்தின் சுழற்சிக்கோணம் செய்து கற்றல்

சமபக்க முக்கோணத்தின் சுழற்சிக்கோணம் 120 பாகை என்பதை செயல்வழியாகக் கற்கும் 7 ஆம் வகுப்பு மாணவியர். காணொளி காண இங்கே சொடுக்குக

மாணவர் செயல்பாடு

வளரறி மதிப்பீட்டு செயல்பாடுகள். மாணவர்களின் வளரறி மதிப்பீட்டு செயல்பாடுகள் சுட்டி விகடன் இதழில் வெளியானவை.

Wednesday, 3 August 2016

மெய் நிகர் வகுப்பறை தொடக்கம்

அன்பாசிரியர் தொடரில் இப்பள்ளி ஆசிரியர் புகழேந்தி பற்றி படித்த பெயர் குறிப்பிட விரும்பாத கத்தார் நாட்டில் பணியாற்றும் அரசு பள்ளியில் படித்த தமிழர் ஒருவர் புதிதாக புரஜக்டர் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார் அந்த மகிழ்ச்சியை எளிமையாகக் கொண்டாட விரும்பினோம். விருத்தாசலம் கோட்டாட்சியர் திரு செந்தில்குமார் அவர்கள் பள்ளிக்கு வந்து புரஜக்டரை இயக்கி எம் மாணவர்களையும் எங்களையும் மகிழ்வித்தார்.புரவலருக்கு நன்றி.